இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி யாழில் பேரணி!

இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி யாழில் பேரணி!

இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வட மாகாண கடற்தொழிலாளர்களினால் இன்று பேரணியொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அகில இலங்கை கடற்தொழிலாளர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த பேரணி இன்று காலை 10:30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வட மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய துணைத் தூதுவர் ஊடாக இந்திய பிரதமருக்கும் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This