ஜனாதிபதியின் காசா முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி!

ஜனாதிபதியின் காசா முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி!

காஸா வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘காசா சிறுவர் நிதியம்’ (‘Children of Gaza Fund’) ஒன்றை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இப்தார் கொண்டாட்டங்களை கைவிட்டு இந்த நிதிக்கு பங்களிக்குமாறு அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் 1 மில்லியன் டொலர் நன்கொடை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படும்.

CATEGORIES
TAGS
Share This