பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றவுள்ளேன் – இந்தோனேசிய ஜனாதிபதி

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றவுள்ளேன் – இந்தோனேசிய ஜனாதிபதி

இந்தோனேசியாவில் சில நாட்களுக்கு முன்புதான் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற பிரபோவோ சுபியாண்டோ அந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர்,

“ஜனாதிபதி தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததற்கு இந்தோனேசிய மக்கள் மற்றும் ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் பிரபோவோ சுபியாண்டோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த இந்தோனேசிய ஜனாதிபதி தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This