தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எனக்கு எதுவும் தெரியாது – சுமந்திரன்

தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எனக்கு எதுவும் தெரியாது – சுமந்திரன்

தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் நான் எதிராளி அல்ல எனவும் அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தமிழரசுக் கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கு சம்பந்தமான ஆவணங்களையே நான் இதுவரை கண்டுள்ளேன்.

கட்சி சார்பாக இந்த வழக்கிலே எடுக்கவுள்ள நிலைப்பாடு தொடர்பாக எனக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This