பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் புறக்கோட்டை மொத்த சந்தையில் 330 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 400 ரூபாவை நெருங்கியுள்ளது.

அத்துடன் தம்புள்ளை மற்றும் மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையங்களில் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது.

CATEGORIES
TAGS
Share This