அதிமுகவில் இணைந்தார் நடிகை கெளதமி!

அதிமுகவில் இணைந்தார் நடிகை கெளதமி!

பாஜகவிலிருந்து விலகியிருந்த நடிகை கெளதமி அதிமுகவில் இன்று (14) இணைந்துள்ளார். அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக அறியப்பட்ட நடிகை கெளதமி, பா.ஜ.கவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை ஆணையர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாகவும் நடிகை கெளதமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை கெளதமி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, அ.தி.மு.கவில்இணைந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கெளதமி, எடப்பாடி பழனிசாமியின் பணிகள் என்னைக் கவர்ந்ததால் நான் அதிமுகவில் இணைந்தேன். அதிமுகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜகவில் இருந்து ஏன் விலகினேன் என்பதை உரிய நேரத்தில் விரிவாகக் கூறுகிறேன் எனக் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This