வரலாற்றில் இன்று – பெப்ரவரி 13 : வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் சோங்-நம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் – 2017

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 13 : வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் சோங்-நம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் – 2017

1880 – தாமசு ஆல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.

1913 – 13ஆவது தலாய் லாமா திபெத்திய விடுதலையை அறிவித்தார்.

1914 – பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.

1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது டெல்லிக்கு நகர்த்தியது.

1934 – சோவியத் நீராவிக்கப்பல் செலியூன்ஸ்கின் 111 பேருடன் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: புடாபெஸ்ட் நகர முற்றுகை முடிவுக்கு வந்தது. ஜேர்மனிய, அங்கேரிப் படைகள் செஞ்சேனையிடம் சரணடைந்தன.

1960 – பிரான்சு வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4ஆவது நாடானது.

1971 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.

1975 – நியூயார்க் உலக வணிக மையத்தில் தீ பரவியது.

1978 – சிட்னியில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.

1981 – அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் லூயிவில் நகரில் இடம்பெற்ற கழிவுநீர்க் குழாய் வெடிப்பில் இரண்டு மைல் நீள வீதிகள் சேதமடைந்தன.

1983 – இத்தாலி, துரின் நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.

1984 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1985 – இலங்கையில் கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

1990 – ஜேர்மனிய மீளிணைவு: இரண்டு ஜேர்மனிகளையும் ஒன்றினைக்க இரண்டு-கட்டத் திட்டத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது.

1991 – வளைகுடாப் போர்: பகுதாது நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.

1996 – நேபாளத்தில் மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால் நேபாள மக்கள் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது.

2001 – எல் சல்வடோரில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.

2004 – அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

2008 – அவுஸ்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக அவுஸ்ரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.

2010 – இந்தியாவில் புனே நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, 60 பேர் காயமடைந்தனர்.

2017 – வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் சோங்-நம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This