அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம்!

அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம்!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

மக்களின் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் உட்பட அரசாங்கத்தின் கொள்கையுடன் உடன்படமறுக்கும் மக்களின் நடவடிக்கைகளை பயங்கரவாதம் என முத்திரைகுத்தி மக்கள் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை பயன்படுத்த முடியும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை முடிவடைந்துள்ளது – நீதிமன்றம் தனது முடிவை சபாநாயகருக்கு அனுப்பிவைக்கவுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு இந்த வாரம் மனுக்கள் மீதான விவாதங்களை செவிமடுத்தது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் செயலாளர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சாலியபீரிஸ் பயங்கரவாதத்திற்கான வரைவிலணக்கம் பரந்துபட்டதாக காணப்படுகின்றது இதன் காரணமாக அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் கொள்கைகளுடன் உடன்படமறுப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் கீழ் கீழ் தடுத்துவைக்கப்படும் நிலை ஏற்படலாம் என தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு சட்டங்களை கடந்தகாலங்களில் பாதுகாப்பு தரப்பினரும் அரசியல்வாதிகளும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர் புதிய சட்டமூலம் துஸ்பிரயோகம் செய்யப்பவடுதற்கான சாத்தியக்கூறுகள் உண்மையானவை இவை வெறுமனே அனுமானங்களோ ஊகங்களோ இல்லை எனவும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் ஐசிசிபிஆர் போன்றன அரசியல் மற்றும் தனிப்பட்ட எதிராளிகளையும் சிறுபான்மையினத்தவர்களையும் இலக்குவைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்டசுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அவசியமான பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலம் பாதுகாப்பு படைகளிற்கு கைதுசெய்வதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது இது இதுவரை பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மாத்திரமே கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள சாலியபீரிஸ் இது பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தடுத்துவைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதையும் சாலியபீரிஸ் விமர்சித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் முதல் இரண்டு மாதங்களிற்கு தடுத்துவைத்தல் தடுப்பு ஆணையின் தகுதிகளை நீதிபதிகள் ஆராய்வதை இது தடுக்கும் என தெரிவித்த அவர் பொலிஸ்மா அதிபரி;ன் உத்தரவின் பேரில் ஜனாதிபதி தடுப்பு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான கடமைப்பாடு நீதிமன்றத்திற்கு உள்ளது என தெரிவித்த சாலியபீரிஸ் தனிப்பட்ட சுதந்திரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாத்த பாரம்பரியமும் நீதிமன்றத்திற்குள்ளது எனவும் தெரிவித்தார்.

பிரேஸ்கேர்டில் விவகாரம் நாடாளுமன்ற கலைப்பு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

CATEGORIES
TAGS
Share This