AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துணையைத் தேர்ந்தெடுத்த இளைஞர்!
ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங்கிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த சாப்ட்வர் டெவலப்பரான அலெக்சாண்டர் ஜாதன் என்பவர் டிண்டர் செயலியில் தனக்கு பொருத்தமான துணையை கண்டறிய சாட்ஜிபிடி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் இதர பாட்களை பயன்படுத்தி உள்ளார்.
இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பெண்களுடன் சாட் செய்த பிறகு கரினா என்ற பெண்ணை AI தொழில்நுட்பம் அவருக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார். அவருக்கான சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனதாக அவர் கூறினார்.
CATEGORIES உலகம்