தயாசிறிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!

தயாசிறிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனு இன்று விசாரணைக்கு மீள அழைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்து விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This