டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அமெரிக்காவுக்கு நல்லதல்ல: கமலா ஹாரிஸ்

டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அமெரிக்காவுக்கு நல்லதல்ல: கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட உள்ளார். அவரும் டிரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன்.

டிரம்ப் ஜனாதிபதியாவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This