யாழில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது!

யாழில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது!

யாழ். இளவாலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரிடம்  முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒரு சந்தேகநபர் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த இளவாலை நாதவோலை பகுதியினை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்ற போது சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டது.

குறித்த சந்தேநபரை கைது செய்த பொலிசார் விசாரணைகளை  முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் திருடப்பட்ட இலத்திரனியல் மற்றும் சமையல் பொருட்களை சாவகச்சேரி பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்ததாக தெரிவித்தார்.

சந்தேக நபரிடம் இலத்திரனியல் உபகரணங்கள், சமையல் உபகரணங்களை கொள்வனவு செய்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரையும் பொலிசார் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This