தைத்திருநாளை முன்னிட்டு களைகட்டும் முல்லைத்தீவு!

தைத்திருநாளை முன்னிட்டு களைகட்டும் முல்லைத்தீவு!

முல்லைத்தீவில் தைத்திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் “ஊர் ஒன்று படுவோம்” எனும் தொனிப் பொருளிலே இன்று காலை முதல் முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

நாளைய தினம் (15) முல்லைத்தீவு அமைப்பின் ஏற்பாட்டில், கயிறு இழுத்தல், கிளித்தட்டு, தலகணை சண்டை, முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகுபின்னுதல், மோட்டார் சைக்கிள் மெதுவாக ஓடுதல், வினோத உடை, கிறிஸ்மரம் ஏறுதல் என பல விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, தடகள போட்டியின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அகிலத்திருநாயகிக்கு கௌரவிப்பு நிகழ்வு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் மாலை இடம்பெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This