உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல்!

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல்!

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று (10) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று காலையில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

இதன் போது உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This