வரலாற்றில் இன்று – ஜனவரி 07 : அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது –1999

வரலாற்றில் இன்று – ஜனவரி 07 : அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது –1999

1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

1846 – இலங்கையில் தி எக்சாமினர் என்ற ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.

1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

1935 – பெனிட்டோ முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1939 – மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.

1950 – அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

1954 – இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.

1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1972 – எஸ்ப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.

1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.

1985 – ஜப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.

1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1991 – எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.

1999 – அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.

2005 – இத்தாலியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

2012 – நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.

2015 – பாரிசு நகரில் சார்லி எப்டோ அலுவலகங்களில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.

2015 – யெமன், சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This