கட்சி தாவல்கள் ஆரம்பமாகி உள்ளது : நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி தயார்!

கட்சி தாவல்கள் ஆரம்பமாகி உள்ளது : நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி தயார்!

ஜனவரி 27 அல்லது 28 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மார்ச் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்ததாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடிய பின்னர் பாரிய கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக புலனாய்வு அமைப்பினரிடமிருந்து அரசாங்கத் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொள்வார் என ஜனாதிபதி முன்னர் நினைத்திருந்ததாகவும், அதற்குத் தயாராகுமாறு பணிக்குழு உறுப்பினர்கள் மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This