வரலாற்றில் இன்று – ஜனவரி 02 : இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர் – 2006

வரலாற்றில் இன்று – ஜனவரி 02 : இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர் – 2006

1818 – பிரித்தானியக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் நிறுவப்பட்டது.

1893 – வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: ரஷ்யக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.

1920 – ஐக்கிய அமெரிக்காவின் பல நகரங்களில் 6,000 இற்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.

1921 – எசுப்பானியாவின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: மணிலா ஜப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியில் நியூரம்பெர்க் நகரத்தின் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.

1954 – பத்மசிறீ, பத்மபூசண், பத்மவிபூசன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.

1955 – பனாமாவின் அரசுத்தலைவர் ஒசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.

1959 – சந்திரனை நோக்கிய முதலாவது விண்கலம் லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1963 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது.

1971 – கிளாஸ்கோவில் காற்பந்தாட்ட அரங்கு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் உயிரிழந்தனர்.

1974 – ஓப்பெக் தடையை அடுத்து, பெட்ரோல் சேமிப்புக்காக, வாகனங்களுக்கான 55 மை/மணி என்ற உச்ச வேகத்தை அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.

1975 – பீகார், சமஸ்திபூர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ரெயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிசுரா படுகாயமடைந்தார்.

1976 – தெற்கு வடகடல் கரைகளில் பலத்த காற்று வீசியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழந்தனர்.

1978 – பாகிஸ்தான், முல்தான் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1982 – சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.

1992 – சியார்சியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் சிவியாத் கம்சக்கூர்தியா பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

1993 – யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை: கிளாலி நீரேரியில் பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1999 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.

2004 – ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.

2006 – திருகோணமலை மாணவர்கள் படுகொலை: இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 – மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

2008 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

CATEGORIES
TAGS
Share This