வடக்கு கிழக்கில் வலுப்பெறும் போராட்டங்கள்!

வடக்கு கிழக்கில் வலுப்பெறும் போராட்டங்கள்!

கிளிநொச்சியில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் விசாரணைகளுக்காக ஒப்படைத்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களுக்கு நீதி கோரி, கடந்த இரண்டாயிரத்து 485 நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினமாக இன்றைய தினம், முற்பகல் கிளிநொச்சி ஏ-9 வீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட சில பகுதிகளிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This