சீஷெல்ஸ் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்!

சீஷெல்ஸ் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்!

சீஷெல்ஸின் பிரதான தீவை இன்று உலுக்கிய பாரிய வெடிப்பினால் வர்த்தகப் பகுதியொன்று தரைமட்டமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாஹே தீவில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் வெடிபொருட்கள் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் வெடித்து சிதறியதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் தெரிவித்துள்ளார்.

66 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாராவது உயிரிழந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இதையடுத்து அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்தது மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிட்டது.

இந்தியப் பெருங்கடல் தீவிலுள்ள நாடான மாஹேவில் உள்ள பிராவிடன்ஸ் தொழிற்பேட்டையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இந்த குண்டுவெடிப்பில் 4 கி.மீ தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This