வெளிநாட்டு பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்; 17 வயது தேரர் கைது!

வெளிநாட்டு பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்; 17 வயது தேரர் கைது!

ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை வெலிமடை வீதியில் உள்ள மகிரிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கு வருகை தந்த 26 வயதான போலந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே தேரர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி சந்தேக நபரான தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைதான சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொலிஸார் தெரிவித்தனர் வருவதாக ஹப்புத்தளை பொலிசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This