பாகிஸ்தானில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு : 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு : 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் பாடசாலை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று முன்தினம் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென அந்த பாடசாலை அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This