பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலின் 63 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி (16.00 GMT) நள்ளிரவில் சுனாமி அலைகள் பிலிப்பைன்ஸைத் தாக்கக்கூடும் என்றும் மேலும் மணிக்கணக்கில் ,அது தொடரலாம் என்றும் பிலிப்பைன்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மீட்டர் (3 அடி) உயரம் கொண்ட சுனாமி அலைகள் சனிக்கிழமை (16.30 GMT) ஜப்பானின் மேற்கு கடற்கரையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்தோனேசியா, Palau மற்றும் மலேசியாவின் சில பகுதிகளையும் சுனாமி தாக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This