மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத கால தடை!

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத கால தடை!

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர், நாடாளுமன்றத்துக்குள் ஒரு மாத காலத்துக்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமான போது, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது, கருத்து தெரிவித்ததையடுத்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

குறித்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த யோசனைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரம் இந்த யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This