யாழ். உரும்பிராய் காளி கோவிலில் திருட்டு!

யாழ். உரும்பிராய் காளி கோவிலில் திருட்டு!

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோவிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகைதிருடப்பட்டுள்ளதோடு ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை பணமும் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி அளவில் ஆலய பூசகர் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்ட போதே குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரிய வந்ததாக ஆலய பூசகர் காவல்துறையினரிடம் வாய்முறைப்பாடு வழங்கியுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This