எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரை சுட்டு வீழ்த்த வேண்டும் – வைகோ

எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரை சுட்டு வீழ்த்த வேண்டும் – வைகோ

இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தாவது,

எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் கடற்தொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இலங்கை கடற்படையினர் மட்டுமல்லாது கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில் அந்த நாட்டு குண்டர்களாலும் தமிழக கடற்தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றார்கள். கடந்த நாற்பது வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழக கடற்தொழிலாளர்களின் பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றன.

பல்வேறு சூழல்களை கடந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் தமிழக கடற்தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This