இராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் – மாலைதீவு ஜனாதிபதி வேண்டுகோள்!

இராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் – மாலைதீவு ஜனாதிபதி வேண்டுகோள்!

மாலைதீவில் இருந்து இந்தியா தனது இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸ் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

மாலைதீவு ஜனாதிபதியாக வெள்ளிக்கிழமை பதவியேற்ற முகமது மூயிஸை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம் அவா் இந்த வேண்டுகோளை விடுத்தாா்.

செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தல் பிரசாரத்திலும் இந்திய இராணுவத்தை மாலைதீவிலிருந்து வெளியேற்றுவதாக அவா் வாக்குறுதி அளித்திருந்தாா்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் உரையாற்றிய முகமது மூயிஸ், ‘மாலத்தீவின் இறையாண்மை, சுதந்திரத்தைப் பாதுகாக்க அந்நிய நாட்டு இராணுவம் இல்லாத மாலைதீவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இந்நிலையில், மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவுடனான அதிபா் முகமது மூயிஸ் சந்திப்பு குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை இந்தியா திரும்பப் பெற இந்தச் சந்திப்பின்போது அதிபா் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைக்கவே செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் மாலைதீவு மக்கள் எனக்கு பெரும்பான்மை பலத்துடன் வாக்களித்துள்ளனா். மாலைதீவு மக்களின் ஜனநாயக விருப்பத்தை இந்தியா நிறைவேற்றும் நம்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This