உலகக்கோப்பை இறுதிப்போட்டி- சென்னையில் பொது இடங்களில் திரையிட ஏற்பாடு!

உலகக்கோப்பை இறுதிப்போட்டி- சென்னையில் பொது இடங்களில் திரையிட ஏற்பாடு!

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இறுதிப்போட்டியை நேரில் காணவும் ரசிகர்கள் அகமதாபாத்திற்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மக்கள் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பொது வெளியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This