புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்; விமல் அழைப்பு

புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்; விமல் அழைப்பு

புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவம்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியினர் தற்போது கர்மவினையை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, கூட்டணியாக செயற்படும்போது பங்காளிக் கட்சிகளினதும் ஆலோசனையை பெற்று அதற்கமைய செயற்படுமாறு ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் கூட்டணி அரசியல் கலாசாரம் பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்தால் கோட்டாபயவின் ஆட்சிதான் இன்றும் நீடித்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ அறிவுரையை கேட்கும்போது சிரிப்புதான் வந்தது. ஏனெனில் அதுதான் கர்மவினை.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை எப்படியாவது ஒத்திவைத்து ஆட்சியை தக்கவைப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அதற்காக சலுகை அறிவிப்புகள் வெளிவருகின்றனர்.

இப்படியான தற்காலிக நடவடிக்கைகளால்தான் நாடு நாசமானது எனவும் ஆகவே மக்கள் புதிய அரசியல் பயணத்துக்கு தயாராக வேண்டும் எனவும் விமல் வீரவம்ச தெரிவித்தார்.

CATEGORIES
Share This