அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்திப்பு!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் சென்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

இதற்கிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ஆம் திகதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய பிறகு ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This